Transcript
  • பெரியார் 1000 பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் வினா-விடை

    தயாரா நீங்கள்?

    ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்குகிறது அனைவரும்எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழகத்தின் மாபெரும் வினா-விடைப் போட்டியான“பெரியார் 1000”.

    தஞ்சை வல்லத்தில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்பநிறுவனத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும், ‘பெரியார் பிஞ்சு’ இதழும்இணைந்து இப்போட்டியை நடத்துகின்றன.

    கடந்த ஆண்டுகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் தமிழகமெங்குமிருந்து பங்கேற்றுசாதனை படைத்தார்கள். அதே போல இந்த ஆண்டும், தந்தை பெரியாரின் 141-ஆம்ஆண்டு பிறந்தநாளையொட்டி, பல லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும்வகையில், தமிழகம் மற்றும் புதுவையில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டிகள்நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு-வருகின்றன. இந்த முறை பள்ளிகள் தோறும்பரிசுகள், மாவட்ட அளவிலான பரிசுகள் என விரிந்து பரந்து பரிசு மழை!

    தமிழ், ஆங்கிலத்தில் தேர்வுகள் நடை-பெறுகின்றன. தந்தை பெரியாரின் வாழ்க்கைவரலாறு, அவர்தம் சிந்தனைகளையொட்டி அமையும் 1042 கேள்விகள் அடங்கியபுத்தகம் போட்டியில் பங்குபெறும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுகிறது.அதிலுள்ள கேள்விகளிலிருந்து தான் பெரியார் 1000 போட்டியிலும் வினாக்கள்கேட்கப்படும்.

    1 / 4

  • பெரியார் 1000 பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் வினா-விடை

    நான்கு விடைகள் வழங்கப்பட்டு, அவற்றிலிருந்து சரியான விடையைத்தேர்ந்தெடுக்கும் கொள்குறி வினா அடிப்படையில் (Choose the best) தேர்வு நடக்கும்.45 கொள்குறி வினாக்களுக்கு தலா ஒரு மதிப்பெண்ணும், இறுதியில் கேட்கப்படும்கேள்விக்கு 5 மதிப்பெண்ணுமாக மொத்தம் 50 மதிப்-பெண்களுக்குத் தேர்வுநடைபெறுகிறது. இதற்கென வழங்கப்படும் புத்தகத்தில் இக் கேள்விகளுடன், இனிவரும் உலகம் புத்தகத்தின் சுருக்கம், போட்டிக்கு மாணவர்கள் கருத்தில்கொள்ள-வேண்டிய செய்திகள் மாதிரி வினாத்தாள்,

    நவம்பர் 6,7,8 ஆகிய மூன்று நாட்களில் பள்ளிகள் தோறும் பெரியார் 1000 போட்டிகள்நடத்தப்படவுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருங்கிணைப்பாளர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தொடர்புகொள்ளலாம்.

    மேலும் விவரங்களை www.periyarquiz.com இணைய-தளத்திலும், 9865591918,9442398287, 95512 74813, 9710944812 ஆகிய எண்களிலும் தெரிந்து-கொள்ளலாம்.

    போட்டிகளின் முடிவுகள் டிசம்பர் 2 அன்று மேற்கண்ட இணைய-தளத்தில்வெளியிடப்படும். தந்தை பெரியாரின் நினைவுநாளான டிசம்பர் 24 அன்று அனைத்துமாவட்டங்-களிலும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

    பெரியார் 1000 போட்டியில் பங்குபெற பிஞ்சுகள் அனைவரும் ஆர்வத்துடன்முந்துகின்றனர். நீங்கள் போட்டிக்கு பதிவுசெய்து விட்டீர்களா?

    2 / 4

  • பெரியார் 1000 பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் வினா-விடை

    இந்த ஆண்டு சிறப்பம்சங்கள்

    3 / 4

  • பெரியார் 1000 பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் வினா-விடை

    பங்கேற்க தகுதி : 6ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள். பதிவுக் கட்டணம் : பதிவுக் கட்டணம் (ரூ.50/)-அய் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். தேர்வுக்குரிய பாடம் : முன்பதிவு செய்துள்ள மாணவர்களுக்கு தந்தை பெரியார் பற்றியஆயிரம் செய்திகள் வினா-விடை வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு கையேடுவழங்கப்படும். அதிலிருந்து 45 வினாக்களைக் கொண்ட தேர்வு நடைபெறும். விடைத்தாள்: விடைத்தாள் 'Coding Sheet' வடிவமைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும். 45வினாக்களைக் கொண்ட வினாத் தாளில், ஒவ்வொறு வினாவுக்கும் 4 விடைகள் (A, B, C,D) என கொடுக்கப்பட்டிருக்கும். சரியான விடையைத் தெரிவு செய்து, விடைத்தாளில்அதற்குரிய எழுத்தை முழுமையாக நிழலிட்டு நிரப்ப வேண்டும். இறுதியாகக்கேட்கப்படும் வினாவிற்கு விளக்கமான விடை (எழுத்தில்) அளிக்க வேண்டும்.தவறானவிடைக்கு மதிப்பெண் குறைப்பு இல்லை. தேர்வு மொழி : தமிழ் / ஆங்கிலம்

    4 / 4


Top Related