newham...ஒர ச றந த ந ய ஹ ம ந க க க வ ட -19 ம ட ப உத த...

11
NEWHAM high streets நியூஹாமின் பிரதான வதிகளை மட்டெடுப்பதற்கான மட்புத் நியூஹாமின் பிரதான வதிகளை மட்டெடுப்பதற்கான மட்புத் திட்டத்தை ஒருங்கிணைந்து உருவாக்குதல் திட்டத்தை ஒருங்கிணைந்து உருவாக்குதல் திட்டம் பற்றிய கண்ணோட்டம் நியூஹாம் பிரதான வதிகள்

Upload: others

Post on 13-Dec-2020

4 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: NEWHAM...ஒர ச றந த ந ய ஹ ம ந க க க வ ட -19 ம ட ப உத த ய ன த ண 5-க க ன ஒர த ள வ ன ம ட ப த த ட டம

NEWHAMhigh streets

நியூஹாமின் பிரதான வீதிகளை மீட்டெடுப்பதற்கான மீட்புத் நியூஹாமின் பிரதான வீதிகளை மீட்டெடுப்பதற்கான மீட்புத் திட்டத்தை ஒருங்கிணைந்து உருவாக்குதல் திட்டத்தை ஒருங்கிணைந்து உருவாக்குதல்

திட்டம் பற்றிய கண்ணோட்டம்

நியூஹாம் பிரதான வீதிகள்

Page 2: NEWHAM...ஒர ச றந த ந ய ஹ ம ந க க க வ ட -19 ம ட ப உத த ய ன த ண 5-க க ன ஒர த ள வ ன ம ட ப த த ட டம

2

நியூஹாமின் பிரதான வீதிகள் அன்றாடம் உபயோகப்படுத்தப்படும் முக்கிய இடங்களாக விளங்குகின்றன, இவை தங்கள் சமூகங்களுக்கு சேவை செய்கின்றன மற்றும் மாநகருக்கு வருகை தரும் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்க உதவுகின்றன. இவை கணிசமான அளவு பொருளாதார மற்றும் சமூகச் செயல்பாடுகள் நடைபெறும் பகுதிகளாக உள்ளன மற்றும் இவை தங்களுக்கென தனிப்பட்ட அடையாளங்களைக் கொண்டுள்ளன. இவை நியூஹாமில் வசிக்கின்ற மற்றும் பணிபுரிகின்ற நபர்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய இடமாக விளங்குகின்றன மற்றும் அனைவரையும் ஒன்றிணைக்கும் திறனையும் இவை பெற்றிருக்கின்றன. பொதுமக்கள், வணிகங்கள், மற்றும் தன்னார்வ மற்றும் பொதுத் துறைகளைச் சேர்ந்த தனிப்பட்ட உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் உதவியுடன், பிரதான வீதிகள்

உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கின்ற, அனைவருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி வாய்ப்புகளை வழங்குகின்ற, சமூக ஒத்திசைவை உருவாக்குகின்ற, மற்றும் சுறுசுறுப்பான பயணத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை மேம்படுத்துகின்ற தனிச்சிறப்பு மிக்க உள்ளடக்கிய இடங்களாக மாறக்கூடும். கவுன்சிலின் சமீபத்திய சமூக வளம் உருவாக்கல் மற்றும் ‘ஒரு சிறந்த நியூஹாமை நோக்கி’ கோவிட்-19 மீட்பு உத்திகள் நியூஹாம் மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வை ஆதரிக்கின்ற உள்ளார்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவதில் பிரதான வீதிகளை முக்கிய இடத்தில் வைத்துள்ளன. நியூஹாம் பிரதான வீதிகள் திட்டமானது ஒரு சிறந்த நியூஹாமை நோக்கி கோவிட்-19 மீட்பு உத்தியின் தூண் 5-க்கான ஒரு தெளிவான மீட்புத் திட்டம் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது 15 நிமிட சுற்றுப்புறங்கள் கொள்கையை தன்னகத்தே கொண்ட ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான சமூகங்களுக்கு ஆதரவளிக்கின்ற பிரதான வீதிகளை உருவாக்குவதற்கான முயற்சிகளை கவுன்சில் மேற்கொள்ள வேண்டும் என்பதை கட்டாயமாக்குகிறது. 15 நிமிட சுற்றுப்புறம் என்பது எந்தவொரு குடியிருப்பாளரும் தனது வீட்டிலிருந்து 15 நிமிட நேர நடைப்பயணத்திற்குள் பெறக்கூடிய அடிப்படை, அன்றாடத் தேவைகளைக் குறிக்கிறது.

NEWHAMhigh streets

திட்டம் பற்றிய கண்ணோட்டம்திட்டம் பற்றிய கண்ணோட்டம்

Page 3: NEWHAM...ஒர ச றந த ந ய ஹ ம ந க க க வ ட -19 ம ட ப உத த ய ன த ண 5-க க ன ஒர த ள வ ன ம ட ப த த ட டம

3

நியூஹாமின் பிரதான வீதிகள் கோவிட்-19 தொற்றினால் கணிசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளன, இந்தத் திட்டம் அவர்கள் குணமடைவதற்கு பெரிதும் ஆதரவாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். நியூஹாம் பிரதான வீதிகள் குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகங்களின் மந்தநிலை மற்றும் மீட்பில் நிலவும் சவால்களைக் கையாளுவதற்குத் தேவையானவற்றை அவர்கள் பெற்றிருப்பதை உறுதிசெய்ய அவர்களுடைய மகிழ்ச்சியையும் நலவாழ்வையும் மையமாகக் கொண்ட மீட்புப் பாதையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கவுன்சில் மற்றும் சமுதாயங்கள் சமீபத்திய சவால்களைக் கருத்தில் கொண்டு, ஒரு நியாயமான, பசுமையான மற்றும் சிறப்பான உள்ளூர் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான பகிரப்பட்ட வளங்களாக நமது பிரதான வீதிகளை கூட்டாக நிர்வகிக்கவும் பேணி வளர்க்கவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒன்றிணைந்து செயல்படுவது என்றால், நமது பிரதான வீதிகள் தற்போதும் எதிர்காலத்திலும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கும் திறன் பெற உதவுவதில் அனைவருக்கும் முக்கியப் பங்கு உண்டு என்பதாகும். கொள்கைகள் மற்றும் சாத்தியமுள்ள திட்டங்களின் தொகுப்பைக் கண்டறியவும், எதிர்கால முதலீட்டுக்கு வழிகாட்டக்கூடிய ஒத்துழைப்பு மனப்பான்மை கொண்ட கூட்டாண்மைகளை உருவாக்கவும் உங்களுடனும், நியூஹாம் பிரதான வீதிகளில் வசிக்கின்ற மற்றும் வேலை செய்கின்ற நபர்களுடனும் நாங்கள் இணைந்து செயல்பட விரும்புகிறோம். அதே போல, இத்திட்டம் குறுகிய காலத்தில் விரைவான தீர்வு தரக்கூடியது அல்ல. இது ஒருங்கிணைந்த நிர்வாகம் மற்றும் கூட்டு நடவடிக்கை

மூலம் நியூஹாமின் பிரதான வீதிகளில் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கான ஒரு நீண்டகாலப் பொறுப்பு ஆகும். இந்தச் செயல்முறையிலிருந்து வெளிப்படுகின்ற, இன்னும் அடையாளம் காணப்படாத செயல்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியிருக்கும். மிகவும் சாதகமானதாக ஏற்றுக்கொள்ளப்படும் திட்ட யோசனைகள் வரவிருக்கும் ஆண்டுகளில் நிதிக் கேட்புகள் வாயிலாக தீவிரமாக முதலீடு திரட்டுவதற்கு எங்களுக்கு உதவும், இது வெற்றிபெறும் பட்சத்தில் உள்ளூர் மக்கள் பார்க்க விரும்புவதற்கு ஏற்ப பிரதான வீதிகளை மேம்படுத்த முடியும்.

திட்டத்துடன் எவ்வாறு இணைந்து செயல்படுவது?திட்டத்துடன் எவ்வாறு இணைந்து செயல்படுவது?இந்த ஆவணம் திட்டத்தின் ஒட்டுமொத்த நோக்கம், அணுகுமுறை மற்றும் குறிக்கோள்கள் பற்றிய அறிமுகத் தகவல்களை வழங்குகிறது. நீங்கள் இதில் பங்கேற்பதற்கும் திட்டத்தின் சமீபத்திய செய்திகளை உங்களுக்குத் தெரிவிப்பதற்கும் தேவையான வாய்ப்புகளை உருவாக்க நியூஹாம் கோ-கிரியேட் (Newham Co-Create) ஆன்லைன் தளத்தை நாங்கள் பயன்படுத்தவிருக்கிறோம். சமீபத்திய தகவல்கள் நியூஹாம் கவுன்சிலின் சமூக ஊடகங்கள் வாயிலாக (Facebook / Twitter / Instagram)உங்களுக்குத் தெரிவிக்கப்படும். நீங்கள் ஏதாவது கேள்விகள் கேட்க வேண்டுமென விரும்பினாலோ அல்லது எங்களுடைய அஞ்சல் பட்டியலில் சேர்ந்துகொள்ள விரும்பினாலோ, எங்களைத் தொடர்புகொள்வதற்கான மின்னஞ்சல்: [email protected] அல்லது தொலைபேசி எண்: 08008611424, திங்கள் முதல் வியாழன் வரை, 10.00 - 16.00 மணிக்கு இடையே

Page 4: NEWHAM...ஒர ச றந த ந ய ஹ ம ந க க க வ ட -19 ம ட ப உத த ய ன த ண 5-க க ன ஒர த ள வ ன ம ட ப த த ட டம

4

திட்டத்தின் அணுகுமுறைதிட்டத்தின் அணுகுமுறைநியூஹாம் பிரதான வீதிகளுக்கான கொள்கைகள், சாத்தியமுள்ள செயல்திட்ட யோசனைகள் மற்றும் கூட்டாண்மைகளின் தொகுப்பைக் கொண்டுள்ள ஒவ்வொரு பிரதான வீதிக்கான மீட்புத் திட்டத்தை உருவாக்குவதற்கான திட்டத்தின் அணுகுமுறை என்ன? எங்கள் அணுகுமுறையின் சில முக்கியப் பண்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

நியூஹாம் பிரதான வீதிகளுக்கான இடம் சார்ந்த, ஒருங்கிணைந்து வடிவமைக்கப்பட்ட, ஏற்புடைய மற்றும் ஆதார அடிப்படையிலான மீட்புத் திட்டத்தை அடைய, சுழற்சி அடிப்படையில் செயல்படுகின்ற மூன்று முக்கிய படிகள் உள்ளன: மதிப்பிடுதல், ஒருங்கிணைந்து வடிவமைத்தல், மற்றும் செயல்படுத்துதல். இந்த சுழற்சி அடிப்படையிலான செயல்முறை நியூஹாம் பிரதான வீதிகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் குடியிருப்பாளர்கள், வணிகங்கள் மற்றும் உள்ளூர் பங்குதாரர்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஒத்துழைப்புடன் வேலை செய்வதில் கவுன்சிலின் நிலையான அர்ப்பணிப்பை உறுதிசெய்கிறது.01. மதிப்பிடுதல் 01. மதிப்பிடுதல் தரவும் ஆதாரமும் நியூஹாமின் பிரதான வீதிகள் திட்டம் ஏற்புடையதாக இருப்பதற்கும், நகர மையங்களில் நிகழும் மாற்றங்களுக்கு பிரதிச்செயலாற்றுவதற்கும், காலப்போக்கில் நிகழும் மாற்றங்களைக் கண்காணிப்பதற்கும் உதவும்.

02. ஒருங்கிணைந்து வடிவமைத்தல02. ஒருங்கிணைந்து வடிவமைத்தல்நமது பிரதான வீதிகளின் எதிர்காலத்திற்கு வழிவகுக்கின்ற கொள்கைகள் மற்றும் செயல்திட்டம் பற்றிய கொள்கைகள் மற்றும் திட்ட யோசனைகளை முன்மொழிவதற்கும் விவாதிப்பதற்கும் நியூஹாமின் குடியிருப்பாளர்கள், வணிகங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின்றன.

பிரதான தெருக்களுக்கான உத்திகளை குடியிருப்பாளர்கள், வணிக உரிமையாளர்கள் மற்றும் உள்ளூர் பங்குதாரர்களுடன் ஒருங்கிணைந்து நாங்கள் உருவாக்கியுள்ளோம். நாங்கள் உருவாக்கியுள்ள நியூஹாம் கோ-கிரியேட் ஆன்லைன் தளம் கோவிட்-19 தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டுக் காலத்தின்போது இந்தக் கூட்டுமுயற்சியை பாதுகாப்பாகத் தொடங்க எங்களுக்கு உதவுகிறது.

மாநகர் முழுவதும் பிரதான வீதிகளுக்கான தனிப்பட்ட உத்திகளை உருவாக்க நாங்கள் பல கட்டங்களாகச் செயல்படுவோம். உத்தியின் முதலாவது கட்டம் 2020-இல் தொடங்குகிறது, இது பசுமை வீதி, ஃபாரஸ்ட் கேட், மேனர் பார்க் மற்றும் லிட்டில் இல்ஃபோர்டு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

இது நீண்ட கால அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு திட்டமாகும், வாய்ப்புகள் மற்றும் நிதிகள் கிடைக்கும்போது இது செயல்படுத்தப்படும். மதிப்பீடு மற்றும் இணை வடிவமைப்பு நிலைகளிலிருந்து பெறப்படும் தகவல்கள் எதிர்கால நிதி வாய்ப்புகள் மற்றும் சேவைகளுக்கான கேட்புகளுக்கு வழிகாட்ட எங்களுக்கு உதவும் என்பதால் முனைப்புடன் இணைந்து செயல்படுகிறோம்.

ஒன்றிணைந்து தகவலளிக்கப்பட்ட முடிவுகள் எடுப்பதற்காக நமது பிரதான வீதிகளைப் பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்ளத் தேவையான ஆதாரங்களையும் தரவுகளையும் நாங்கள் சேகரித்து வருகிறோம். முக்கிய ஆதார கருப்பொருள்கள்: மக்களும் சமுதாயமும், பொருளாதாரமும் வேலையும், குடிமையும் பங்கேற்பும், சுற்றுச்சூழலும் காலநிலையும், சுகாதாரமும் நலவாழ்வும், வளர்ச்சியும் வேலைவாய்ப்பும்.

03. செயல்படுத்துதல்03. செயல்படுத்துதல்மதிப்பீடு மற்றும் ஒருங்கிணைந்து வடிவமைத்தல் செயல்முறையிலிருந்து கண்டறியப்பட்ட திட்ட யோசனைகள் அவற்றுக்கான நிதி வாய்ப்புகள் கிடைக்கும்போது காலப்போக்கில் செயல்படுத்தப்படும். இந்தத் தலையீடுகள் தனியார் துறையின் ஒத்துழைப்புடன் கவுன்சிலால் விநியோகிக்கப்படும், அல்லது உள்ளூர் மக்களுடன் இணைந்து தயாரிக்கப்படும்.

Page 5: NEWHAM...ஒர ச றந த ந ய ஹ ம ந க க க வ ட -19 ம ட ப உத த ய ன த ண 5-க க ன ஒர த ள வ ன ம ட ப த த ட டம

5

திட்டத்தின் கொள்கைகளும் நோக்கங்களும்திட்டத்தின் கொள்கைகளும் நோக்கங்களும்இந்தத் திட்டம் நியூஹாம் கவுன்சிலின் சொத்து உருவாக்கம் மற்றும் ஒரு சிறப்பான நியூஹாமை நோக்கி கோவிட்-19 மீட்பு உத்திகளின் நோக்கங்களை ஆதரிக்கிறது, எனவே இது நியூஹாம் பிரதான வீதிகளை அதிக ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான சமுதாயங்களுக்கான இன்றியமையாத அம்சங்களை வழங்குகின்ற இடங்களாக பயன்படத்தக்க வகையில் மாற்றுகின்ற தளத்தினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதைச் செய்துமுடிக்க, இத் திட்டம் தனது முன்மொழியப்பட்ட கொள்கைகள் மற்றும் செயல்திட்ட யோசனைகள் வாயிலாகவும், நியூஹாமின் பிரதான வீதிகளை அமைப்பதில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான தொடர்ச்சியான ஒத்துழைப்புச் செயல்முறையை உருவாக்குவதன் மூலமும் சமுதாய ஒருங்கிணைப்பு, சமுதாயத் திறன், மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றில் மேலும் ஆதரவளிப்பதற்கான பாதைகளை அடையாளம் காணும்.

நியூஹாம் பிரதான வீதிகளுக்கான தலையீடுகளின் வகைகளைப் பற்றி நீங்கள் நன்கு புரிந்துகொள்ள உதவுவதற்கு, நமது பிரதான வீதிகளை ஆதரித்து முன்னேற்றுவதற்கு மூன்று வகையான செயல்திட்டங்கள் இருக்கும் என நாங்கள் மதிப்பிட்டுள்ளோம்.

பொது செயற்கள தலையீடுகள்

நியூஹாமில் வேலை செய்கின்ற, வசிக்கின்ற அல்லது வருகை தருகின்ற மக்கள் அதன் பிரதான வீதிகளை எந்த அளவுக்கு மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிறார்கள் என்பதன் குறிப்பிடத்தக்க பகுதி பொது செயற்களத்தைச் சார்ந்திருக்கிறது. செயல்திட்டத்தின் சில யோசனைகள் பொது செயற்களத்தை நாம் எப்படி மேம்படுத்தலாம் மற்றும் மாற்றியமைக்கலாம் என்பதைப் பற்றியதாக இருக்க வேண்டும். நியூஹாமை வடிவமைக்கவும் (Shape Newham) திட்டம் பொது செயற்களத் தீர்வுகளை ஒருங்கிணைந்து வடிவமைப்பதில் ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்கியுள்ளது, மற்றும் இது நியூஹாம் பிரதான வீதிகள் திட்டத்தின் கீழ் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

செயல்பாட்டுப் பகுதிகள் பொது செயற்களத்திற்கு அப்பால், நகர மையங்களால் வழங்கப்படும் பயன்பாடுகள், இடங்கள் சேவைகள் மற்றும் செயல்பாடுகளின் உருவாக்கம் அவற்றை வெற்றிகரமான இடங்களாக ஆக்குகிறது. பிரதான வீதிகளுக்கு புதிய பயன்பாடுகளைக் கொ ண் டு வ ரு வ தை நோக்கமாகக் கொண்ட பெரிய முன்னோடித் திட்டங்கள் மீட்புத் திட்டங்களின் அத்தியாவசியமான பகுதியாக இருக்கும். இந்தத் திட்டங்கள் பல்வேறு பங்குதாரர்களுக்குச் சொந்தமான பெரிய சொத்துக்களை உ ள் ள ட க் கி யி ரு ப் ப த ற் கா ன சாத்தியக்கூறு இருப்பதால், இவற்றுக்கு கவுன்சிலின் முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட பெரிய ஒருங்கிணைப்பு தேவைப்படும்.

இடம் சாராத திட்டங்கள்

இந்தத் திட்டம் நியூஹாமின் வெளியிடங்கள் வாயிலாக மட்டுமல்லாமல், உடல்நலம் மற்றும் நலவாழ்வு, பங்கேற்பு, வேலைவாய்ப்பு, பயிற்சி மற்றும் இளைஞர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்கின்ற மென்மையான நிகழ்ச்சிகள் மற்றும் செயல்திட்டங்கள் வாயிலாகவும் நியூஹாமை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும். இந்த யோசனைகள் கவுன்சில், உள்ளூர் குழுக்கள், வணிகங்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களால் வழங்கப்படும்.

மேலே குறிப்பிடப்பட்ட பலவகையான செயல்திட்டங்களில் பணிபுரிவது எளிதானது அல்ல. பொது நிதியம் குறித்த நமது செயல்பாடுகளில் நாம் தைரியமானவர்களாகவும், புதுமையானவர்களாகவும், கூட்டுச்செயல்பாட்டு எண்ணம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். அடுத்து வரும் பக்கங்களில் UK மற்றும் வெளிநாடுகளிலிருந்து பல புதுமையான நிகழ்வு ஆய்வுகளை நாங்கள் சேகரித்துள்ளோம், பல்வேறு துறைகளைச் சார்ந்த பங்குதாரர்களின் ஒத்துழைப்பு என்பது அவற்றின் முக்கிய நோக்கம் ஆகும்: கவுன்சில், தனியார் மற்றும் தன்னார்வத் துறை, உள்ளூர் வணிகங்கள், நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பாளர்கள்.

Page 6: NEWHAM...ஒர ச றந த ந ய ஹ ம ந க க க வ ட -19 ம ட ப உத த ய ன த ண 5-க க ன ஒர த ள வ ன ம ட ப த த ட டம

6

செயல்திட்ட யோசனைகள்செயல்திட்ட யோசனைகள்உள்ளூர் பிரதான வீதிகளையும் அதன் சுற்றுப்புறங்களையும் மேம்படுத்துவதற்கான ஆற்றலைப் பெற்றுள்ள UK மற்றும் வெளிநாடுகளிலிருந்து தொடர்ச்சியாக பல புதுமையான நிகழ்வு ஆய்வுகளை நாங்கள் சேகரித்துள்ளோம், இந்த நிகழ்வு ஆய்வுகளை உங்கள் உள்ளூர் பிரதான வீதிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டு செயல்படுத்தக்கூடிய ஏதேனும் செயல்திட்ட யோசனைகளுக்கான உந்துசக்தியாக நாங்கள் வழங்குகிறோம். இந்த செயல்திட்ட யோசனைகளின் பட்டியல் எந்த இந்த செயல்திட்ட யோசனைகளின் பட்டியல் எந்த வகையிலும் முழுமையானது அல்ல, எனவே உங்கள் கருத்துக்களை வகையிலும் முழுமையானது அல்ல, எனவே உங்கள் கருத்துக்களை அறிந்துகொள்ள நாங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்.அறிந்துகொள்ள நாங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்.பின்வரும் முக்கியக் கருத்துக்களின் கீழ் இந்த நிகழ்வு ஆய்வுகளை நாங்கள் வகைப்படுத்தியுள்ளோம்: பொருளாதாரமும் வேலையும், வளர்ச்சியும் வேலைவாய்ப்பும், சுகாதாரமும் நலவாழ்வும், காலநிலையும் சுற்றுச்சூழலும் மற்றும் குடிமையும் பங்கேற்பும். ஒவ்வொரு செயல்திட்ட யோசனை பற்றியும் நிகழ்வு ஆய்வுடன் கூடிய சிறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது, அதோடு, செயல்திட்டத்தின் வகை, தேவைப்படும் வளங்கள் மற்றும் உங்கள் பிரதான வீதியில் செயல்திட்டம் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தின் வகை ஆகியவற்றைக் குறிக்கும் சில ஐகான்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து வரும் செயல்திட்ட யோசனைகளுக்குச் செல்வதற்கான முக்கியச் சொல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NEWHAMhigh streets

செயல்திட்டத்தின் வகைசெயல்திட்டத்தின் வகை

ொருளாதாரமும் வேலையும்

சுகாதாரமும் நலவாழ்வும்

குடிமையும் பங்கேற்பும்

சுற்றுச்சூழலும் காலநிலையும்

வளர்ச்சியும் வேலைவாய்ப்பும்

பொது செயற்கள தலையீடுகள்

செயல்பாட்டுப் பகுதிகள்

இடம் சாராத நிகழ்ச்சிகள்

தேவைப்படும் வளங்கள்தேவைப்படும் வளங்கள் (அதாவது, நேரம், நிதி, மக்கள்)

உயர்வான வளங்கள் நடுத்தர வளங்கள் தாழ்வான வளங்கள்

தாக்கம் ஏற்படும் பகுதிகள்தாக்கம் ஏற்படும் பகுதிகள்

Page 7: NEWHAM...ஒர ச றந த ந ய ஹ ம ந க க க வ ட -19 ம ட ப உத த ய ன த ண 5-க க ன ஒர த ள வ ன ம ட ப த த ட டம

7

பொருளாதாரமும் வேலையும்பொருளாதாரமும் வேலையும்

மேக்கர்ஸ்பேஸ்கள்

கட்டுப்படியாகக்கூடிய பணியிடம்

உள்ளூர் ஆன்லைன் ஷாப்பிங்

மேக்கர்ஸ்பேஸ்கள் என்பவை கருவிகள், தொழில்நுட்பம் மற்றும் உபகரணத்தை உருவாக்குவதற்கான, கற்றுக்கொள்வதற்கான மற்றும் பகிர்ந்துகொள்வதற்கான கூட்டுச்செயல்பாட்டுப் பணியிடங்கள் ஆகும். மேக்கர்ஸ்பேஸ்கள் அவற்றின் மாதிரியைப் பொறுத்து அனைத்து வயதினருக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கலாம். பிளாக்ஹார்ஸ் ஒர்க் ஷாப் (Blackhorse Workshop) என்பது தயாரி-ப்பதற்கும் செப்பனிடுவதற்குமே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இடம் ஆகும். அவை முழுமையான வசதிகள் கொண்ட மரம், உலோகம் மற்றும் விதைப்பு பணிமனைக்கான அணுகல் அளிக்கின்றன. மக்கள் பொருள்களைச் செப்பனிட அல்லது தங்கள் வணிகங்களைத் தொடங்க அவை உதவுகின்றன.

கட்டுப்படியாகக்கூடிய பணியிடங்கள் புதிய வணிகங்கள், சமூக நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கான நிரந்தர அல்லது இடைநேர இடத்தை அளிக்கின்றன.

லாம்பெத்தில் உள்ள சர்வதேச வீடு (International House) பெரிய 11 மாடி கொண்ட அலுவலகத் தொகுதி 3Space மூலம் கட்டுப்ப-டியாகக்கூடிய பணியிடமாக மாற்றப்பட்டதற்கான ஓர் உதாரணம் ஆகும். 3Space ஆனது சமூக நிறுவனங்கள், சமுதாயக் குழுக்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர் ஆகியோரை ஆதரிக்கின்ற ’பைகிவ்ஒர்க்’ (‘BuyGiveWork’) திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

ஆன்லைன் தளம் என்பது உங்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ள உள்ளூர் வணிகங்களை ஆதரிப்பதையும், உங்கள் வீட்டு வாயிலில் பொருள்களைப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்ட அதே நேரம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதையும் ஊக்குவிக்கின்ற பைக் டெலிவரி நெட்வொர்க்குடன் இணைந்த ஒரு தளம் ஆகும்.

Shopappy என்பது நகரத்தில் ஓர் இடத்தில் விற்பனை செய்வதற்காக தங்களிடம் உள்ள தகவல், தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் காண்பிக்கின்ற உள்ளூர் சுயாதீன கடைகள் மற்றும் வணிகங்களை இயக்குவதன் மூலம் செயல்படுகின்ற ஆன்லைன் தளம் ஆகும்.

photo by Ben Quinton

photo by 3space

Page 8: NEWHAM...ஒர ச றந த ந ய ஹ ம ந க க க வ ட -19 ம ட ப உத த ய ன த ண 5-க க ன ஒர த ள வ ன ம ட ப த த ட டம

8

சுகாதாரமும் நலவாழ்வும்சுகாதாரமும் நலவாழ்வும்

சுகாதாரக் கூட்டுறவு அமைப்புகள்

சுகாதாரக் கூட்டுறவு அமைப்பு என்பது தேவை கொண்டவ-ர்களுக்கு ஆதரவு, சேவைகள் மற்றும் பிரதான நலம்பேணலை வழங்குகின்ற, குடியிருப்பாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் வல்லு-நர்களால் உருவாக்கப்பட்ட ஓர் உள்ளூர் பிணையம் ஆகும்.

நெதர்லாந்தில், சுகாதாரத் துறையை தனியார் மயமாக்கிய பிறகு உள்ளூர்ப் பகுதிகளில் சுகாதாரக் கூட்டுறவு அமைப்புகள் பிரபலமாகின. இது குடியிருப்பாளர்களின் சுற்றுப்புறத்தில் வசி-ப்பவர்களுக்கு ஆதரவளிப்பதன் வாயிலாக குடியிருப்பாளர்களின் பிணையம் சுகாதார தூதர்களாக மாற உதவுகிறது.

சுகாதார அண்மை மையம்

சுகாதார அண்மை மையம் ஒரு சமுதாயத் தளத்தை மருத்துவ நடைமுறையுடன் ஒருங்கிணைக்கிறது, உள்ளூர் சமுதாயத்தின் சமூக மற்றும் மருத்துவக் காரணங்கள் இரண்டையுமே கருத்தில் கொண்டு பல்வேறு வகையான சேவைகளை வழங்குகிறது.

லண்டனில் இயங்கிவரும் ஒரு தொண்டு நிறுவனமாகிய பிரா-ம்லி-பை-போ (Bromley-by-Bow) மையம் இதற்கு ஒரு தலைசிறந்த உதாரணமாகத் திகழ்கிறது, இது சமுதாய மையத்தை சுகாதார மையத்துடன் இணைக்கிறது. குடும்பங்களும் இளைஞர்களும் தங்கள் நலவாழ்வை மேம்படுத்துகின்ற அதே நேரம் அவர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள இவை ஆதரவளிக்கின்றன.

விளையாட்டு வீதிகள்

விளையாட்டு வீதிகள் என்பவை இளைஞர்களும் முதியவர்களும் வெளியில் சென்று விளையாடுவதற்கு உதவுகின்ற, அவர்களு-டைய உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு ஆதரவளிக்கின்ற தற்காலிகமாக மூடியுள்ள வீதிகள் ஆகும்.

நியூஹாம் கவுன்சில் விளையாட்டு வீதிகளை உருவாக்க பெ-ற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினருக்கு உதவுகிறது, இது குழந்தைகள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள பொது இடங்களில் கண்காணிப்பின் கீழ் விளையாடுவ-தற்கு அனுமதிக்கின்ற, பகல் நேரத்தில் நான்கு மணி நேரம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்ட இடமாக இருக்கலாம்.

photo by Rob Voss

photo by The Glasshouse community led design

Page 9: NEWHAM...ஒர ச றந த ந ய ஹ ம ந க க க வ ட -19 ம ட ப உத த ய ன த ண 5-க க ன ஒர த ள வ ன ம ட ப த த ட டம

9

குடிமையும் பங்கேற்பும்குடிமையும் பங்கேற்பும்

உள்ளூர் நாணயம்

இவை ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் செலவிடப்படுவதை-யும், உள்ளூர் வணிகங்களுக்கான சந்தைப்படுத்தல் உத்தியாகச் செயல்படுவதையும் உறுதிசெய்வதன் மூலம் உள்ளூர் பொரு-ளாதாரங்களை ஆதரிப்பதற்காக குறிப்பிட்ட நில அமைப்புகளில் செலவிடக்கூடிய நாணயங்கள் ஆகும்.

பிரிக்ஸ்டன் பவுண்ட் என்பது பிரிக்ஸ்டனின் உள்ள சுயாதீன உள்ளூர்க் கடைகள் மற்றும் சந்தை வர்த்தகங்களில் பயன்படு-த்தக்கூடிய உள்ளூர் நாணயம் ஆகும். இந்த முயற்சி உள்ளூர் செயல்திட்டங்களுக்கு உதவக்கூடிய ஒரு சமுதாய கஃபே -ஐயும் கொண்டுள்ளது.

பங்கேற்பு மையங்கள்

பங்கேற்பு மையங்கள் என்பவை பிரதான வீதிகளில் குடியிருப்பவ-ர்கள் ஒன்றிணைவதற்கும், புதிய செயல்திட்டங்கள், யோசனைகள் மற்றும் கூட்டுறவு வணிகங்களை உருவாக்குவதற்கும் அமை-க்கப்பட்ட இடங்கள் ஆகும். சில கவுன்சில்கள் தங்கள் பெருநகரங்க-ளில் இத்தகைய பங்கேற்பை ஆதரிப்பதற்காக இந்த யோசனையைப் பயன்படுத்துகின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் (Every One Every Day) என்பது பார்கிங் மற்றும் டாகென்ஹாமில் செயல்படுத்தப்படும் ஒரு திட்டம் ஆகும், இது குடியிருப்பவர்கள் தங்கள் சுற்றுப்பு-றத்தில் நேரடி செயல்திட்டங்களை உருவாக்க உதவுகிறது. இது பிரதான வீதிகளில் உள்ள தொடர்ச்சியான மையங்கள் / கடைகளிலி-ருந்து செயல்படுகிறது.

இளைஞர் அதிகாரமளித்தல் திட்டங்கள்

இளைஞர் தொழில்முனைவுத் திட்டங்கள் பள்ளிகளால் ஏற்பாடு செய்யப்படலாம் அல்லது பொது அல்லது மூன்றாம் தரப்புத் துறையால் வழங்கப்படலாம். இளைஞர்களின் திறன்களை மேம்ப-டுத்துவதும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு ஆதரவளிப்பதும் இதன் இலக்காகும். நியூயார்க்கில் உள்ள கிரீன் பிராங்க்ஸ் மெஷின் (Green Bronx Machine) என்பது மாணவர்களின் ஆரோக்கியத்துக்கு ஆதரவளி-க்க, அவர்களுடைய வணிகத் திறன்களை வளர்க்க, அதே நேரத்தில் பசுமையான சமுதாயங்களை உருவாக்க நகர்ப்புற வேளாண்மை மற்றும் முக்கிய பள்ளிச் செயல்திறன் குறிகாட்டிகளைப் பயன்படு-த்துகின்ற பள்ளி சார்ந்த திட்டம் ஆகும்.

photo by Every One Every Day

photo by Eleni Katrini

Photo by NeONBRAND on Unsplash

Page 10: NEWHAM...ஒர ச றந த ந ய ஹ ம ந க க க வ ட -19 ம ட ப உத த ய ன த ண 5-க க ன ஒர த ள வ ன ம ட ப த த ட டம

10

காலநிலையும் சுற்றுச்சூழலும்காலநிலையும் சுற்றுச்சூழலும்

நகர்ப்புற வேளாண்மை

நகர்ப்புற வேளாண்மை என்பது நகரப் பகுதிகளில் உணவு விளைவிக்கின்ற, பதப்படுத்துகின்ற மற்றும் விநியோகிக்கின்ற நடைமுறை ஆகும். இது நகரங்களில் உணவுப்பயிர்களை வளர்த்த-ல், கரிமக் கழிவுகள் மற்றும் கழிவுநீரை நிர்வகித்தல் ஆகியவற்றில் புதுமையான வழிகளைக் கடைப்பிடிப்பதை உள்ளடக்கியதாக இருக்கலாம். அக்ரோசைட் என்பது பாரிஸின் புறநகர்ப் பகுதிகளில் அமைந்து-ள்ள சமுதாயப் பண்ணை ஆகும், இது சமுதாய சமையலறை, ஒது-க்கீடுகள், உரம் தயாரித்தல், தேன்கூடு மற்றும் கோழிக்கூண்டு ஆகியவற்றை உள்ளடக்குகிறது. உற்பத்தியானது ஒரு உள்ளூர் கடை மூலம் உள்ளூர் மீட்புப் பிணையத்துடன் ஒருங்கிணைக்க-ப்படுகிறது.

பாதுகாப்பான மிதிவண்டித் தடங்கள்

மிகவும் ஆரோக்கியமான மற்றும் நிலையான போக்குவரத்து வடிவத்துக்கு வழிவகுக்கும் விதமாக, நகரத்தில் மிதிவண்டிப் பய-ணத்தை ஊக்குவிப்பதற்காக பாதுகாப்பான மிதிவண்டிப் பாதைகள் தேவைப்படுகின்றன. மிதிவண்டிப் பாதைகள் தங்களுக்கென தனியான தடங்களைக் கொண்டுள்ளன, இவை பாதைகளுக்கி-டையே பாதுகாப்புத் தடுப்புகளையும் கொண்டுள்ளன மற்றும் சாலை ஒரு பாதுகாப்பான மிதிவண்டி ஓட்டும் அனுபவத்தை வழங்குகிறது.

பசுமை வீதிகள் மற்றும் ரெயின்கார்டன்கள்

பசுமை வீதி என்பது பசுமைப் பகுதிகளையும் புயல் நீரிலிரு-ந்து நிலையான வடிகால் வசதி பெறுவதற்கான ரெயின்கார்டன்க-ளையும் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு வீதி ஆகும். இந்த அணுகுமுறை ஊடுருவ முடியாத மேற்பரப்புகளிலிருந்து புயல் நீரின் வேகத்தைக் குறைக்கின்ற, வடிகட்டுகின்ற மற்றும் தூய்மை-யாக்குகின்ற தாவரங்களைக் கொண்டதாகும் (உ.ம். வண்டிப்பாதை மற்றும் நடைபாதைகள்). பசுமை வீதிகள் மழை நீரை அதன் ஆதார-த்திலேயே பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

photo by Paul Kruger

photo by Dylan Passmore

photo by R-Urban

Page 11: NEWHAM...ஒர ச றந த ந ய ஹ ம ந க க க வ ட -19 ம ட ப உத த ய ன த ண 5-க க ன ஒர த ள வ ன ம ட ப த த ட டம

11

வளர்ச்சியும் வேலைவாய்ப்பும்வளர்ச்சியும் வேலைவாய்ப்பும்

கடை முன்பகுதி மேம்பாடுகள்

கடை முன்பகுதி மேம்பாடுகள் பிரதான வீதிகளின் தோற்றத்தை-யும் உணர்வையும் மேம்படுத்தி வாடிக்கையாளரின் வருகையை அதிகரிக்கக்கூடும், மற்றும் பிரதான வீதிகளில் உள்ள கடைகளு-க்கு அதிக மக்களைக் கவர்ந்திழுக்கிறது.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான கடை முன்பகு-தி மேம்பாடு வால்தம் ஃபாரஸ்டில் உள்ள லேடன் ஹை ரோடு ஆகும். இந்தத் திட்டம் கடை முன்பகுதி மேம்பாடுகள், மற்றும் மேற்பகுதித் தோற்றத்தின் அலங்காரம் மற்றும் மீட்டமைத்தல் ஆகி-யவற்றை உள்ளடக்குகிறது.

பாதுகாப்பான தெருக்கள் மேம்பாடுகள்

பாதசாரிகள் கடக்கும் இடம் போன்ற குறுக்கீடுகளும், பிற வீதி மேம்பாடுகளும் நடப்பதை ஊக்குவிக்கின்ற அதே நேரம் பிரதான வீதிகளின் தோற்றத்தையும் உணர்வையும் மேம்படுத்த உதவ-க்கூடும்.

தொடக்கத்தில் TFL-இன் எதிர்கால வீதிகள் காப்பக நிதியம் மூலம் நிதியளிக்கப்பட்ட வண்ணமயமான கடக்கும் இடங்கள் (Colourful Crossings), பேங்க்சைடின் மையப்பகுதியில் சவுத்வார்க் தெருவு-க்கு வண்ணத்தையும் அனிமேஷனையும் கொண்டுவருகிறது.

பொது செயற்களத்தைச் செயல்படுத்துதல்

நகர்ப்புற அறைகலன் மற்றும் புதுமையான விளக்குகள் மக்கள் ஓய்வெடுப்பதற்கும் பொழுதுபோக்குவதற்கும், மாலை நேர-ங்களில் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வதற்கும் தேவையான பகுதிகளை வழங்குவதன் மூலம் நாள் முழுவதும் பொது செய-ற்களத்தை செயல்பாட்டில் வைத்திருக்க உதவுகின்றன. ஏதென்ஸில், கைவிடப்பட்ட ஒரு குறுந்தெரு புதுமையான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பின் பொதுமக்கள் பார்வையிட-க்கூடிய ஒரு இடமாக மாறிவிட்டது. பிஃபோர்லைட் (Beforelight) குடியிருப்பாளர்களிடமிருந்து பழைய விளக்குகளைச் சேகரி-த்து அவற்றை இருள் நிறைந்த ஒரு குறுந்தெருவில் பொருத்தி எரியச் செய்ததன் மூலம், அதை நடந்து செல்ல பாதுகாப்பான ஒரு இடமாக ஆக்கியுள்ளது.

photo by Ruth Ward

photo by Adrienne Photography Ltd

photo by Aris Kamarotos